ETV Bharat / state

'காவல் துறையினரின் வாகனங்களிலேயே திமுக பணப்பட்டுவாடா...!' - எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பு

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரைகள் அனைத்துக் கட்சியினராலும் பரபரப்பாக நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் இன்று (பிப்ரவரி 16) உதகையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து உள்ளாட்சித் துறை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பரப்புரைசெய்தார்.

காவல்துறை வாகனங்களிலேயே,திமுக பணப்பட்டுவாடா செய்கிறது - எஸ்.பி.வேலுமணி

author img

By

Published : Feb 16, 2022, 2:38 PM IST

வேலுமணி தேர்தல் பரப்புரையின்போது பேரூராட்சிகளில் போட்டியிடும் 20-க்கும் மேற்பட்ட அதிமுக வேட்பாளர்கள் வராததால் சலசலப்பு ஏற்பட்டது.

20-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வராததால் சலசலப்பு

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இறுதிகட்ட பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் உதகை நகராட்சி, சோலூர், பிக்கட்டி, கீழ்குந்தா பேரூராட்சித் தேர்தலில் போட்டியிடும் 99 அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எஸ்.பி. வேலுமணி இன்று உதகையில் பரப்புரைசெய்தார்.

காவல் துறை வாகனங்களிலேயே திமுக பணப்பட்டுவாடா

அப்போது வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்தபோது பேரூராட்சிகளில் போட்டியிடும் 20-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வராததால் சலசலப்பு ஏற்பட்டது.

பரப்புரையின்போது பேசிய எஸ்.பி. வேலுமணி திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், தற்போது தமிழ்நாட்டில் விளம்பர ஆட்சி நடைபெறுவதாகவும் கூறினார். அதனைத் தொடர்ந்து செய்தியளரிடம் பேசிய வேலுமணி,

“தேர்தல் வந்தவுடன் திமுக அரசு கண்டிப்பாக காவல் துறை மூலமாக என்னை விசாரணைக்கு அழைத்து ஏதாவது முடக்கும் செயல்களில் ஈடுபடும் என்று ஏற்கனவே தெரியும்.

காவல் துறை வாகனத்திலேயே பணப்பட்டுவாடா

நான் ஏற்கனவே தெரிவித்துள்ளதுபோல லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியபோது எனது வீட்டிலிருந்தோ, எனக்குச் சம்பந்தபட்டவர்களின் வீட்டிலிருந்தோ பணமோ, எந்த ஆவணங்களையோ கைபற்றவில்லை. திமுக அரசு அதிமுக மீது அவப்பெயர் ஏற்படுத்தவே தேர்தல் சமயம் பார்த்து இதுபோன்று டெபாசிட் தொகை ரூ.110 கோடியை முடக்கியுள்ளது.

இதனை தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள். அதிமுகவைச் சார்ந்த யாராவது தவறு செய்தால் அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் என்று தவறாக விளம்பரம் செய்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அரசு பரிசுப் பொருள்கள், பணத்தை காவல் துறை வாகனத்தைப் பயன்படுத்தி விநியோகம் செய்யும் சூழ்நிலை உள்ளதாகவும், காவல் துறையை திமுக அரசு தவறாகப் பயன்படுத்துவதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: கொடநாடு கொலை வழக்கில் பழனிசாமியை கைது செய்யாதது ஏன்? - புகழேந்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.