ETV Bharat / state

டிராக்டரில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கொண்டு சென்ற அதிகாரிகள் - malliyamthurkkam

நீலகிரி: சத்தியமங்கலம் அடுத்த மல்லியம்துர்க்கம் கிராமத்துக்கு டிராக்டர் மூலம் வாக்குப்பெட்டிகளை தேர்தல் அலுவலர்கள் கொண்டு சென்றனர்.

மல்லியம்துர்க்கம்
author img

By

Published : Apr 17, 2019, 11:25 PM IST

தமிழ்நாட்டில் இரண்டாம் கட்டமாக நாளை மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், நீலகிரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் சட்டப்பேரவை தொகுதியில் 294 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 91 வாக்குச்சாவடிகள் தாளவாடி, தலமலை, குன்றி, கடம்பூர் மலைப்பகுதியில் உள்ளன. அதனைத்தொடர்ந்து, வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன.

சத்தியமங்கலம் கடம்பூர் மல்லியம்துர்க்கம் மலைக்கிராமத்தில் உள்ள 495 வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடிக்கு டிராக்டர் மூலம் வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. மேலும், போதிய சாலை வசதியில்லாததால் கடந்த 50 ஆண்டுகளாக நடைபாதையாக வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. தேர்தல் அலுவலர்கள் செல்லும் வனச்சாலையில் யானை, கரடிகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் உள்ளூர் கிராமவாசிகளின் துணையுடன் பாதுகாப்பாக சென்றனர்.

முன்னதாக இக்கிராம மக்கள் சாலை வசதியில்லாததால் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

எஸ்ஒய்17டிராக்டர்: சத்தியமங்கலம் அடுத்த மல்லியம்துர்க்கம் கிராமத்துக்கு டிராக்டர் மூலம் வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் தேர்தல் அலுவலர்கள்

மல்லியம்துர்க்கம் வாக்குச்சாவடிக்கு டிராக்டரில் ஏறிச் சென்ற அதிகாரிகள்

TN_ERD_SATHY_01_17_TRACTOR_PHOTO_TN10009  
:
சத்தியமங்கலம் அடுத்த மல்லியம்துர்க்கம் மலைக்கிராமத்தில் உள்ள 495 வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடிக்கு டிராக்டர் மூலம் வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.

நீலகிரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் சட்டப்பேரவை தொகுதியில் 294 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 91 வாக்குச்சாவடிகள் தாளவாடி, தலமலை, குன்றி, கடம்பூர்  மலைப்பகுதியில் உள்ளன. வாக்குச்சாவடியில் பணியாற்றும்  தேர்தல் அலுவலருக்கு சத்தியில் பணிஆணை வழங்கும் பணி மதியம் 1 மணி வரை நீடித்தது.அதனைத்தொடர்ந்து, வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்தபோலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன. சத்தியமங்கலம் கடம்பூர் மல்லியம்துர்க்கம் கிராமம் அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. போதிய சாலை வசதியில்லாததால் கடந்த 50 ஆண்டுகளாக நடைபாதையாக வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் பொருகள்களை எடுத்துச்சென்றனர்.  கடந்த தேர்தலில் இருந்து  டிராக்டர் மூலம் வாக்குப்பதிவு பெட்டி மற்றும் வாக்குப்பதிவுக்கான பொருள்களுடன் துணை ராணுவப்படையினர் வாக்குச்சாவடி ஊழியர்கள் சென்றனர். வனச்சாலையில் யானை, கரடிகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.  யானைகள் நடமாட்டம் இல்லாததை உறுதிபடுத்தியபிறகு  பாதுகாப்பு கருதி,அவர்களுக்கு துணையான உள்ளூர் கிராமவாசிகள் உடன் சென்றனர். சாலை வசதியில்லாததால் தேர்தலை புறக்கணிப்பதாக மல்லியம்துர்க்கம் கிராமமக்கள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 
--
TN_ERD_SATHY_01_17_TRACTOR_PHOTO_TN10009
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.