நீலகிரி: குன்னூரில் அரசு தோட்டக்கலைத்துறைக்குச்சொந்தமான சிம்ஸ்பூங்கா பிரதான சுற்றுலா தலமாக செயல்பட்டு வருகிறது. இதில் நிரந்தரப்பணியாளர்கள் 43 ஊழியர்களும், ஒப்பந்த ஊழியர்கள் 30 பேரும் என சுமார் 70-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நிரந்தரப்பணியாளர்களான சரோஜா, நஞ்சம்மாள், கமலா ஆகிய 3 ஊழியர்கள் ஓய்வுபெற்றனர்.
பின்ஓய்வு பெற்ற ஊழியர்கள் இது குறித்து தெரிவிக்கையில் "கடந்த 40 ஆண்டுகளாக அரசு பூங்காவான சிம்ஸ்பூங்காவில் மழை மற்றும் காற்று காலங்களில் தனது முழு உழைப்பையும் கொடுத்து பணி செய்து வந்த எங்களுக்கு அரசு சார்பாக எந்தவொரு உதவிகளும் கிடைக்கப்பெறாமல் வயது முதிர்ந்த காலத்தில் ஓய்வூதியம்கூட கிடைக்கப்பெறாமல் ஓய்வு பெறுவது தங்களுக்கு மன வேதனை அளிக்கிறது. எனவே அரசு சார்பாக ஏதேனும் உதவிகள் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்’ என கண்ணீருடன் சென்றனர்.
அதுமட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் 1297 தோட்டக்கலைத்துறை ஊழியர்களாகப்பணிபுரிந்து வரும் நிலையில் அனைவருக்கும் அரசு உதவிகள் கிடைத்திடும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க:கோடை கண்காட்சிக்கு வாடையில் நடவுப்பணி!