ETV Bharat / state

டாப்சிலிப்பில் பார்வைக் குறைபாட்டால் பரிதவிக்கும் யானைகள்! - டாப்சிலிப் முகாம் யானைகள்

டாப்சிலிப் கோழிக்கமுத்தி முகாமில் உள்ள பல யானைகள் கண் பார்வை குறைபாடு காரணமாக தவிப்பதையடுத்து, விரைவில் நிரந்தர கால்நடை மருத்துவரை நியமிக்க விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டாப்சிலிப்பில் பார்வைக் குறைபாடால் பரிதவிக்கும் யானைகள் தொடர்பான காணொலி

author img

By

Published : Jan 5, 2022, 11:30 AM IST

ஆனைமலை புலிகள் காப்பத்திற்குட்பட்ட பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப்பில் யானைகள் முகாம் உள்ளது. இது 1920ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் தொடங்கப்பட்டது. 100 ஆண்டு பழமை வாய்ந்த இந்த முகாமில் மொத்தம் 27 யானைகள் உள்ளன. அனைத்து யானைகளுக்கும் காலை, மாலை வேளைகளில் வயதிற்கேற்ப உணவு வழங்கப்படுகிறது.

இதில் சிவகாமி, சாரதா ஆகிய இரு யானைகளுக்கு ஒரு கண்ணில் முழுமையாக, மறு கண்ணில் பாதியளவும் பார்வைத்திறன் பறிபோய்விட்டன. மேலும் நான்கு யானைகள் பார்வைக்குறைபாட்டால் அவதிப்படுகின்றன. பார்வைக்குறைபாடு உள்ள யானைகள் வனத்திற்குள் செல்லும்போது தங்களுக்கான உணவைத் தேடி உண்பதில் சிரமப்படுகின்றன.

தற்போது வரை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கென காலியாக உள்ள பிரத்யேக கால்நடை மருத்துவர் பணியிடம் நிரப்பப்படவில்லை. வனத்துறையினரும் அவ்வப்போது அரசு கால்நடை மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களை அழைத்துவந்து யானைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி கோட்டத்தின் துணை இயக்குனர் கணேசன் பேசுகையில், "அரசு கால்நடை மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களை கொண்டு யானைகளை அடிக்கடி பரிசோதித்து உரிய சிகிச்சை அளித்து வருகிறோம். இங்கு தனியாக கால்நடை மருத்துவரை நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம்.

டாப்சிலிப்பில் பார்வைக் குறைபாடால் பரிதவிக்கும் யானைகள் தொடர்பான காணொலி

சிறந்த கால்நடை மருத்துவர் குழு ஒன்றை ஏற்படுத்தி கண் பார்வை குறைபாடு உள்ள யானைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் முயற்சி எடுத்து வருகிறோம்" என்றார். விரைவில் நிரந்தர கால்நடை மருத்துவரை நியமிக்க விலங்குகள் நல ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.