நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் நெல் நடவுப் பணி செய்ய நெல் நாற்றுக்கள் பயிரிடப்பட்டுள்ளன. நாற்றுக்கள் சிறப்பாக வளர்ந்திருந்த நிலையில், ஒரு வார காலமாக அப்பகுதிக்கு வந்து செல்லும் யானைகள் வயல்களில் இறங்கி நாற்றுக்களை சேதப்படுத்தி வருகின்றன.
தென்மேற்குப் பருவமழை தொடங்கியதால், விவசாயிகள் விவசாயப் பணிகளை மேற்கொள்ளயிருந்த நிலையில் நாற்றுக்களை யானைகள் சேதப்படுத்தி வருவதாகத் தெரிகிறது. இதனால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.
தினந்தோறும் யானைகள் அப்பகுதிக்கு வரும் நிலையில், அந்தப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வனத்துறையினரிடம் முறையிட்டுள்ளனர். ஆனால், வனத்துறையினர் யானைகளை விரட்டவோ, ஊருக்குள் வருவதைத் தடுக்கவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் தமிழில் பேசத் தடை!