நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் சிங்கார வனப்பகுதியை ஒட்டியுள்ள அல்லூர் வயல் பகுதியில், நேற்று 30 வயதுள்ள காட்டு யானை ஒன்று தண்ணீர் குடிப்பதற்காகச் சென்றுள்ளது.
அப்போது, ஆற்றின் கரையோரம் நிறைய பாறைகள் இருந்த நிலையில் பறையில் சறுக்கிக் கீழே விழுந்துள்ளது. மேலே, வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்த யானையை வனத் துறையினர் கண்டறிந்தனர்.
பின்னர், முதுமலையிலிருந்து மூன்று கும்கி யானைகளின் உதவியுடன் விடிய விடிய அந்த யானையை மீட்கும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டனர். சுமார் 12 மணி நேரம் போராடிவந்த நிலையில் இன்று அதிகாலை யானை பரிதாபமாக உயிரிழந்தது.
அங்கு வந்த கால்நடை மருத்துவர்கள், உயிரிழந்த யானையை மீட்டு உடற்கூறாய்வு செய்வதற்காக நடவடிக்கைகளை எடுத்தனர். 12 மணிநேரம் வனத் துறையினர் போராடியும் யானை உயிரிழந்தது வனத் துறையினரின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மின்வேலியால் அபாயம்: குட்டியுடன் தவித்த பெண் யானை!