நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, தேர்தல் ஆணையம் வாக்களிப்பதின் முக்கியதுவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளது.
இதன்படி குன்னூர் வருவாய் துறையினர் சார்பில், தனியார் கல்லூரிகளுடன் இணைந்து பழங்கால விளையாட்டுக்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், வாக்களிப்பதின் முக்கியதுவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், கிராமத்தில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
கால்பந்து, படுக நடனம், பம்பரம் விடுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பான முறையில் விளையாடினர்.