நீலகிரி மாவட்டத்தில் உள்ள டேன் டீ தொழிற்சாலையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆண்டுதோறும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸாக 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு டேன் டீ நிர்வாகம் 10 சதவீதம் மட்டுமே போனஸ் அறிவித்துள்ளது. இதுகுறித்து டேன் டீ மேலாண்மை இயக்குநரை நேரில் சந்தித்து மனு அளித்த அத்தொகுதி எம்.பி. ஆ. ராசா, "கரோனா முடக்க காலத்திலும் தேயிலைக்கு நல்ல விலை கிடைத்து, டேன் டீ நிர்வாகம் கோடிக்கணக்கில் லாபம் பெற்றுள்ளது. இதனால் அயராது உழைத்த டேன் டீ தொழிலாளர்களுக்கு அவர்களின் குடும்ப நிலை கருதி முறையாக 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்" என வலியுறுத்தினார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க:
கிரானைட் கடத்தலைத் தடுக்க சிசிடிவி பொருத்தும் பணி தீவிரம் - தமிழ்நாடு அரசு தகவல்