நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் காசிலிங்கம் நெல்லியாளம் பகுதியில் நேற்று (மார்ச் 29) இரவு பரப்புரை மேற்கொண்டார். இதையடுத்து, பழைய நெல்லியாளம் சந்திப்பில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட போது, அதிமுகவைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவர் திமுகவில் இணைந்துள்ளார்.
பரப்புரை முடித்து திமுக வேட்பாளர் காசிலிங்கம் அங்கிருந்துச் சென்ற பின்பு, அப்பகுதி அதிமுக உறுப்பினர் உதயகுமார் சிவலிங்கத்துடன் திமுகவில் இணைந்தது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, அங்கிருந்த திமுக தொண்டர்கள் அவர் சொந்த விருப்பத்தில் திமுகவில் இணைந்ததாக அதிமுக உறுப்பினர் உதயகுமாரிடம் கூறியுள்ளனர்.
ஆனால் உதயகுமார் உள்பட அவரது உறவினர்கள் ஐந்து பேர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இரு தரப்பினர் ஒருவரை ஒருவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், ஆசைத்தம்பி, மோகன், ஜெயச்சந்திரன், மகேஸ்வரன் ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர்.
உடனடியாக அவர்களை மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைகாக உதகை தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இந்த மோதல் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இரு தரப்பிலும் 4 பேரை கைது செய்து விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: நாமக்கல் எம்பி - நாமக்கல் எம்எல்ஏ இடையே முற்றும் மோதல் - இருவர் மீதும் வழக்குப் பதிவு