நீலகிரியில் தனியார் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு மாவட்ட சுகாதாரத்துறை சார்பாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை கூறப்படுகிறது.
இதன் காரணமாக உதகமண்டலத்தில் உள்ள சேரிங்கிரஸ் பகுதிக்கு தங்களின் வாகனங்களுடன் வந்த தனியார் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அங்கு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை மட்டுமே வசூலிப்பதாகவும், தங்களுக்கும் தமிழ்நாடு அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். அப்போது அங்கு வந்த காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.கணேஷ், ஊழியர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
பின்னர், அவர் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கோரிக்கைகள் எடுத்து செல்லப்படும் எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டனர்.
இதையும் படிங்க: ஆய்வு மேற்கொள்ளவிருக்கும் முதலமைச்சரின் பயணத்திட்டம்