நீலகிரி மாவட்டம் குன்னூர் வி.பி தெருவிலுள்ள சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில், தெய்வீக தமிழக சங்கம் சார்பில் ‘தேசியம் காக்க, தமிழகம் காக்க’ என்ற புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட சங்க பொறுப்பாளர் ஸ்ரீ என்.கே. கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். வண்டிச்சோலை ஆசிரம மாதாஜி ஜீவன் முக்தாநந்தா முதல் புத்தகத்தை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதில், தமிழ்நாட்டின் பாரம்பரியம், பண்பாடு காப்பாற்ற வேண்டிய வழிமுறைகள், மதமாற்றத்தை தடை செய்வது, நாகரீகம் என்ற போர்வையில் நடைபெற்று வரும் கலாசார சீரழிவை தடுப்பது, தாய்மொழியாம் தமிழில் பேசுவது, இந்திய தேசத்தில் தோன்றிய அனைத்து மொழிகளையும் அறிந்து கொள்வது, மதமாற்றம் பிரிவினைவாதம் உள்ளிட்ட தேச விரோத செயல்களுக்கு தீர்வு, இந்து சமுதாய ஒற்றுமை குறித்து பேசப்பட்டது.
இதையும் படிங்க: பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி - பக்தர்களுக்கு அனுமதி இல்லை