கரோனா அச்சம் காரணமாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பிக்கபட்டுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் காவல் துறையினர் கடும் கட்டுபாடுகள் விதித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அநாவசியமாக வெளியே சுற்றி திரியும் நபர்களுக்கு நூதன தண்டனைகளும் அறிவுரைகளையும் காவல் துறையினர் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், குன்னூர் பேருந்து நிலையம், ஓட்டுப்பட்டை, அருவங்காடு போன்ற பகுதிகளில் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் கூட்டமாக வாங்கி செல்கின்றனர்.
இந்தக் கூட்டத்தை தவிர்க்குமாறு காவல்துறையினரும் மாவட்ட நிர்வாகத்தினரும் கூறிவருகின்றனர்.
இதையும் வாசிங்க: குன்னூரில் கரோனா கணக்கெடுக்கும் பணிகள் தொய்வு!