நீலகிரி: பாஸ்டியர் நிறுவன ஆய்வகத்தில் கரோனா தொற்று தடுப்பூசி தயாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவருகிறது.
குன்னூரில், 1907இல் நிறுவப்பட்ட பாஸ்டியர் நிறுவனத்தில், வெறிநாய்க்கடி மருந்து தயாரிக்கப்பட்டது. தற்போது, 'ரேபிஸ்' நோய் கண்டறியும் மையமாகச் செயல்படுவதுடன் மருத்துவமும் அளிக்கப்படுகிறது.
தற்போது முத்தடுப்பு ஊசி மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனமாக மாற்ற, 137 கோடி ரூபாய் செலவில் உலகத்தர கட்டுமானம், உள்கட்டமைப்புப் பணிகள் அனைத்தும் கடந்த ஆண்டு நிறைவுபெற்றன. இந்நிலையில், வரும் ஜூலை மாதத்தில் சோதனைப் பணிகள் தொடங்குவதற்கு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவர் கௌதமன் கூறுகையில், “இங்கு கரோனா தொற்று தடுப்பூசி தயாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவருகிறது. தற்போது கரோனா தொற்று தடுப்பூசியை குறுகிய காலத்தில் அதிக உற்பத்தி மேற்கொள்வது குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் தீவிர பரிசீலனை செய்துவருகிறது.
தொடர்ந்து கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டால், இங்குள்ள ஆய்வகங்களின் பாட்டில்களில் நிரப்பி, பேக்கிங் செய்து அனுப்பவது குறித்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் 30 ஏக்கரில் பயோ சேப்டி லெவல் என்னும் பி.எஸ்.எல்.-3 என்ற அளவில் உயர்த்தினால்தான் குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தில் தயாரிக்க முடியும் என்ற பரிந்துரையையும் ஒன்றிய அரசு பரிசீலனையில் உள்ளது. இவற்றை நிறைவேற்றினால் வருங்காலங்களில் தடுப்பூசிகள் அதிகப்படுத்த வாய்ப்பாக அமையும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாழ்வாதாரமின்றி தவித்த தொழிலாளர்களுக்கு உணவளித்த காவலர்கள்!