நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் ஹில்கிரோ இடையேயான ரயில் பாதையில் பாறை விழுந்ததால் தண்டவாளம் சேதமானது.
இதையடுத்து, கடந்த 16ஆம் தேதி குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டது. மழை தொடர்வதால் ரண்ணிமேடு பகுதியிலிருந்து ஹில்கிரோ பகுதி வரை 6 இடங்களில் மீண்டும் மண் , பாறை மற்றும் மரங்கள் விழுந்துள்ளதால் சீரமைப்புப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மலை ரயில் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து, வரும் 24ஆம் தேதி வரை ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என ரயில்வே உயர் அலுவலர் தெரிவித்துள்ளார்.
மேலும், தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணி நிறைவடைந்தவுடன் 25ஆம் தேதி முதல் குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயிலை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இதையும் படிங்க : மாணவி பாத்திமா லத்திப் தற்கொலைக்கு நீதி வழங்க கோரி ரயில் நிலையம் முற்றுகை