நீலகிரி மாவட்டம் குன்னூரில் 70ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய நீராதாரம் ரேலியா அணை.
44 அடி நீர்மட்ட உயரம் கொண்ட இந்த அணை, கடந்த ஒரு மாதமாக 14 அடியில் மட்டுமே இருந்தது. இந்நிலையில் கடந்த ஒருவாரமாக நீலகிரியில் பெய்து வந்த கனமழையால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத் தொடங்கியது.
இதனால், படிப்படியாக உயா்ந்த நீர்மட்டம் தற்போது 38 அடியாக உயர்ந்துள்ளது. நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் குன்னூர் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:
'சோனியா காந்திக்கு பிறப்புச் சான்றிதழ் நான் தருகிறேன்' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!