நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் மழையால் தண்டவாளங்களில் மண் சரிவு ஏற்பட்டு, பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால், குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பராமரிப்புப் பணிகளுக்காக மேட்டுப்பாளையத்திற்கு மலை ரயில் செல்ல முடியாத நிலையில், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி, புதிய சொகுசுப் பெட்டிகளை இணைத்து, குறைந்த கட்டணத்திற்ல் குன்னூர் முதல் ஊட்டி வரை, மலை ரயில் இயக்கப்பட்டது. இது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மற்ற நாட்களில் இந்த சொகுசுப் பெட்டிகளில் பயணம் செய்ய 500 முதல் 1000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது குன்னூர் - ஊட்டி இடையே இயக்கப்பட்ட இந்த சொகுசுப் பெட்டிகளில், பயணிக்க 35 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டது இதுவே முதல்முறை. எனவே, சுற்றுலாப்பயணிகள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.
இதையும் படிங்க:
'7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்கவேண்டும்'