நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கேர்பெட்டா கிராமத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணியை எதிர்த்து அப்பகுதி மக்கள் 2 வருடங்களாக போராடி வருகின்றனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர் . இந்நிலையில், செல்போன் டவர் அமைக்கும் பணியாளர்கள் காவல்துறை உதவியுடன் பகல் நேரத்தில் ஊரில் யாரும் இல்லாத நேரத்தில் வேலையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள் காவல்துறையினரின் செயலைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டைகளை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். அப்போது பொதுமக்களை சமாதானம் செய்த வட்டாட்சியர் தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணியை நிறுத்துவதாக உறுதியளித்தார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் குடும்ப அட்டைகளை பெற்றுச் சென்றனர்.