வடகிழக்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னுாரில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்துவருகிறது. இதனால் பல இடங்களில் மண் சரிவு ஏற்படுவதுடன், மரங்கள் விழுந்து போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.
தொடர் மழையால் குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே உள்ள ரயில் பாதையில் ராட்சத பாறைகள் விழுந்து, போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. இதனை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருவதால் இன்று (அக்.21) ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில் பாதைகளில் உள்ள பாறைகள் அகற்றப்பட்ட பிறகு மீண்டும் சேவை தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இங்கு கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் மூன்று முறை ரயில் சேவை பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது,
இதையும் படிங்க: குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே மீண்டும் மலை ரயில் இயக்கம்