ETV Bharat / state

நீலகிரியில் ஊதியம் வழங்கக்கோரி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் - ஊதியம் வழங்கக்கோரி போராட்டம்

கரோனா தொற்றின்போது மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு பணிக்கான ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் நகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி
நீலகிரி
author img

By

Published : Jul 31, 2021, 7:52 PM IST

நீலகிரி: உதகை நகராட்சிக்குள்பட்ட 36 வார்டுகளில், கரோனா பெருந்தொற்று காலத்தில் நடத்தப்பட்ட வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணிக்காக ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்காக நாள் ஒன்றுக்கு ரூ. 650 வீதம் சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டது.

இதனடிப்படையில் சுமார் 250 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களாக கரோனா கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், ஒரு மாதம் கூட ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

சம்பளம் குறித்த கேள்விகளுக்கும், முறையான பதில் அளிக்காமல் மெத்தனப்போக்குடன் பதில் அளிப்பதாகவும் ஒப்பந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வருகின்ற திங்கள்கிழமை தங்களுக்கு ஊதியம் தரவில்லை என்றால், மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவதுடன் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பிரபல ஹோட்டல் நிறுவனங்கள் சொத்துகள் மாற்றும் நடவடிக்கைக்கு தடை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.