நீலகிரி: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை விழாவின் நிறைவு நிகழ்ச்சியான 62வது பழக்கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 2 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பூத்து குலுங்குகிறது.
இதனை காண வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பழக்கண்காட்சிக்கான நுழைவு கட்டணத்தை திடீரென உயர்த்தி இருப்பது சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரியவர்களுக்கு 50 ரூபாயாகவும், சிறியவர்களுக்கு 25 ரூபாயாகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோடை விழாவின் நிறைவு நிகழ்ச்சியான 62வது பழக் கண்காட்சி நடைபெற உள்ள நிலையில் பழங்களால் உருவாக்கப்பட்ட கழுகு, பாண்டா கரடி, தாஜ்மஹால், ராட்சத மீன் உருவம், போன்றவை சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக உள்ளது.
இதையும் படிங்க: நீலகிரிக்கு சுற்றுலா செல்கிறீர்களா.? உங்களுக்கான முக்கிய அறிவிப்பு இதோ!