நீலகிரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார். அப்போது ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதாவது, 'தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த உடன் தமிழ்நாடு அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் பாதிப்புகள் குறைந்துள்ளன. மழையின் போது சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர், அனைத்துத் துறை அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், சேதம் குறித்த விவரங்கள் பெறப்பட்டு முதலமைச்சரிடம் அறிக்கை அளிக்கப்படவுள்ளது' என்றார்.