நீலகிரி: ஊட்டி தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் இன்று (ஆக.28) சுமார் 500 அடி பள்ளத்தில் கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தொட்டபெட்டா சிகரத்தில் தற்கொலை பாறைகள் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அத்துமீறி செல்லாமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே அங்கிருந்து நகரைக் காணும் வகையில் அங்குள்ள பாறைகளின் மீது ஏறி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பது வழக்கம். இந்நிலையில், வழக்கம்போல் சுற்றுலாப் பயணிகள் நடுவே பெண் ஒருவர் பாறை ஒன்றின்மீது ஏறி தற்கொலை செய்வதுபோல் நின்றுள்ளார்.
இதனைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் கூச்சலிட்டும் அதை அவர் கண்டுகொள்ளாமல் தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. சுமார் 500 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தவரின் உடலை 2 மணிநேரத்திற்குள் போலீசார் தீயணைப்புத்துறை, வனத்துறையினரின் உதவியுடன் மீட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் சோகம் நிலவியது.
மேலும், தேனாடுகம்பை போலீசார் அப்பகுதிக்கு செல்ல தற்காலிகமாகத் தடை விதித்துள்ளனர். தொடர்ந்து பெண்ணின் தற்கொலை குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வால்பாறை அருகே பிரசவத்தின்போது உயிரிழந்த யானை