நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளான கேத்தி, அரவங்காடு, வெலிங்டன் போன்ற பகுதிகளில நீர்பனி பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று (டிசம்பர் 25) காலை முதல் கடுமையான மேக மூட்டத்துடன் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடும் மேகமூட்டம் காரணமாக மலை பாதைகளில் வாகனங்களை இயக்க முடியாததால், வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதனால், முகப்பு விளக்குகளை ஒளிர விட்டு வாகனங்களை இயக்கி வருகின்றனர். விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், குறைந்த வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இதனிடையே, நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா தலங்களுக்கு செல்லாமல் விடுதிகளிலேயே முடங்கி உள்ளனர்.