நீலகிரி: இந்தியாவில் ராணுவம், விமானப்படை, கப்பற்படைக்கு என தனித்தனியே தளபதிகள் இருந்த நிலையில் முப்படைகளையும் இணைத்து ராணுவ நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையில் முப்படைத் தலைமை தளபதி பொறுப்பு உருவாக்கப்பட்டது.
இதன் முதல் தலைமை தளபதியாக பதவி வகித்த பிபின் ராவத், குன்னூரில் கடந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து முப்படைத் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகானை மத்திய அரசு நியமித்தது. இந்நிலையில் முப்படையின் தலைமை தளபதியாக பதவியேற்ற பிறகு, முதல் முறையாக அவர் நீலகிரி குன்னூர் ராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு ஹெலிகாப்டர் மூலம் இன்று வருகை தந்தார்.
பின்னர் மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர் உயர் ராணுவ அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் ராணுவ உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: G20 Sherpa: உதய்பூரில் துவங்கியது ஜி20 ஷெர்பா கூட்டம்!