நீலகிரி: குன்னூர் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீப காலமாக வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி வனவிலங்குகளான கரடி, காட்டு மாடு, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள உபதலைப்பகுதியில் குடியிருப்புகள் அதிகம் நிறைந்துள்ள பகுதியில் நள்ளிரவில் கரடி ஒன்று விற்பனைக்குக்கொண்டு செல்ல வைக்கப்பட்ட பால் மற்றும் தயிர் வைக்கப்பட்டுள்ள வாகனத்தைச் சுற்றி சுற்றி வந்து தயிர் மற்றும் பால் பாக்கெட்டுகளைக்கடித்து, அதனைக் குடித்து அட்டகாசம் செய்யும் கரடியின் வீடியோ வெளியாகியுள்ளது.
அங்குள்ள குடியிருப்பில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள், குடியிருப்புவாசிகளை பெரும் அச்சமடைய செய்துள்ளது. எனவே, குடியிருப்புப்பகுதியில் உலா வரும் கரடியைக் கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என உபதலைப்பகுதி பொதுமக்கள் குன்னூர் வனத்துறையினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்