நீலகிரி அருகே குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டு எருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வனத்தை விட்டு உணவு தேடி நகர்ப்புறங்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் நேற்று வெலிங்டன் போகி தெரு பகுதியில் உலா வந்த காட்டெருமை நீண்ட நேரமாக இங்குள்ள குடியிருப்புகளுக்கு அருகில் சுற்றித்திரிந்தது. இதன் காரணமாக குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனர். இப்பகுதியில் அடிக்கடி உலாவரும் காட்டெருமையால் அசம்பாவிதங்கள் நடக்கும் முன் இந்த காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பத்திரிகையாளரிடம் மன்னிப்புக்கேட்ட நடிகை ரித்திகா சிங் - என்ன காரணம்?