ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க முடிவு - வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு! - குன்னூரில் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு

நீலகிரி: குன்னூர் அருகே சாலை வசதி அமைத்துத் தர வலியுறுத்தி பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி, தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.

boycott local election
boycott local election
author img

By

Published : Dec 23, 2019, 12:37 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மேலூர் ஊராட்சியில் கீழ் டெரேமியா குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் தேயிலை தோட்ட தொழிலாளர்களாகவும், விவசாயிகளாகவும் உள்ளனர்.

இந்த கிராமத்திற்கு செல்லும் குறுகலான சாலையில் வாகனங்கள் சென்று வர முடியாத அளவிற்கு மோசமான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பல ஆண்டுகளாக மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என்றால் கூட நோயாளிகளை நாற்காலியில் அமர வைத்து, 3 கி.மீ., தூரத்திற்கு தூக்கிச் சென்று மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டிய அவல நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு

அவசர தேவைக்கு செல்ல கூட வாகன வசதி இல்லாமல் உள்ளது. இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சாலை வசதி அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தி டெரேமியா குடியிருப்பு பகுதி மக்கள் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். மக்கள் ஒன்றுசேர்ந்து வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மக்கள் கால்களில் விழுந்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பு!

Intro:

நீலகிாி மாவட்டம் குன்னுாா் அருகேஉள்ள கீழ்டெரேமியா கிராமத்தில் சாலை வசதி இல்லாததல் நோயாளிகளை நாற்காலியில் கொண்டு செல்லும் அவலநிலை  உள்ளாட்சி தோ்தலை புறக்கணிக்க  கிராம மக்கள் முடிவு செய்துள்ளனா் வீடுகளில் கருப்பு கொடி கட்டி  நுாதன முறையில் ஆா்ப்பாட்டம்  

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மேலூர் ஊராட்சியில் கீழ் டெரேமியா பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட
ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக, வசித்து வருகின்றனர்.கிராமத்திற்கு செல்லும் குறுகலான சாலையில் வாகனங்கள் சென்று வர முடியாத அளவிற்கு மோசமான நிலையில் உள்ளது.இதனால் 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை செல்ல முடியாததால் நோயாளிகளை நாற்காலியில் அமர வைத்து தூக்கிச் செல்லும் அவலம் தொடர்ந்து நீடித்து வருகிறது. நோயாளிகளை 3 கி.மீ., தூரம் தூக்கி வந்து வாகனங்கள் மூலம் அனுப்பி வைத்தும் மருத்துவமனைகளில் பலரும் உயிரிழந்துள்ளனர்.இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று மக்கள் ஒன்றுசேர்ந்து கிராமங்களில் கறுப்புக்கொடி கட்டி நூதன போராட்டத்தில் இறங்கினர்.ஆம்புலன்ஸ் உட்பட வாகனங்கள் வந்து செல்லும் அளவிற்கு சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் மக்கள் உள்ளாட்சித் தேர்தலையும் புறக்கணிக்க முடிவு செய்து உள்ளனர்.

Body:நீலகிாி மாவட்டம் குன்னுாா் அருகேஉள்ள கீழ்டெரேமியா கிராமத்தில் சாலை வசதி இல்லாததல் நோயாளிகளை நாற்காலியில் கொண்டு செல்லும் அவலநிலை  உள்ளாட்சி தோ்தலை புறக்கணிக்க  கிராம மக்கள் முடிவு செய்துள்ளனா் வீடுகளில் கருப்பு கொடி கட்டி  நுாதன முறையில் ஆா்ப்பாட்டம்  

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மேலூர் ஊராட்சியில் கீழ் டெரேமியா பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட
ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக, வசித்து வருகின்றனர்.கிராமத்திற்கு செல்லும் குறுகலான சாலையில் வாகனங்கள் சென்று வர முடியாத அளவிற்கு மோசமான நிலையில் உள்ளது.இதனால் 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை செல்ல முடியாததால் நோயாளிகளை நாற்காலியில் அமர வைத்து தூக்கிச் செல்லும் அவலம் தொடர்ந்து நீடித்து வருகிறது. நோயாளிகளை 3 கி.மீ., தூரம் தூக்கி வந்து வாகனங்கள் மூலம் அனுப்பி வைத்தும் மருத்துவமனைகளில் பலரும் உயிரிழந்துள்ளனர்.இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று மக்கள் ஒன்றுசேர்ந்து கிராமங்களில் கறுப்புக்கொடி கட்டி நூதன போராட்டத்தில் இறங்கினர்.ஆம்புலன்ஸ் உட்பட வாகனங்கள் வந்து செல்லும் அளவிற்கு சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் மக்கள் உள்ளாட்சித் தேர்தலையும் புறக்கணிக்க முடிவு செய்து உள்ளனர்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.