நீலகிரி: நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் சிறுத்தை, கரடி, காட்டெருமை, யானை உள்ளிட்ட பல்வேறு வகையிலான வன விலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது குடிநீருக்காவும், உணவுக்காகவும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வழக்கம்.
அந்த வகையில், குன்னூர் கன்னிமாரியம்மன் கோயில் தெரு சாலை வழியாக காட்டெருமை ஒன்று ஊருக்குள் நுழைந்தது. அந்தவேளையில் உள்ளூர்வாசி ஒருவர் மதுபோதையில் காட்டெருமையை செல்போனில் படம் பிடித்துள்ளார். அதைக்கண்ட எருமை எதிர்பாராத நேரத்தில் அவரை ஆக்ரோசமாக முட்டி தூக்கி வீசியது.
இதனால், அவருக்கு முதுகு மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. முதல்கட்ட தகவலில் அவரது பெயர் சிவா என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: வால்பாறை சாலையில் ஒற்றைப் புலி: காணொலி வைரல்