நீலகிரி: மலை ரயில் என்று அழைக்கப்படும் ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவர்.
இந்நிலையில் கரோனா பாதிப்பால், 2020 மார்ச் மாதத்திலிருந்து மலை ரயில் நிறுத்தப்பட்டு, டிசம்பர் மாதம் 31ஆம் தேதி மீண்டும் தொடங்கப்பட்டது.
மேலும், 'டி.என்.43' என்ற பெயரில், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை தனியார் வாடகைக்கு மலை ரயில் இயக்கமும் தொடங்கியது.
எனினும் சில நாள்களில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ஊட்டி மலை இயங்கி வந்த போதும், கரோனா 2ஆம் அலை தொடங்கியதால் 2021 ஏப்ரல் 21ஆம் தேதி மீண்டும் மலை ரயில் இயக்கும் நிறுத்தம் செய்யப்பட்டது.
தற்போது நீலகிரியில் சுற்றுலா பயணிகள வருகை அதிகரித்துள்ளதால், மலை ரயிலை இயக்க தென்னக ரயில்வே சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி செப்டம்பர் 6ஆம் தேதி முதல் மலை ரயில் மீண்டும் இயக்கப்படவுள்ளது. முழு முன்பதிவுடன் சிறப்பு மலை ரயிலாக இயக்கப்படுகிறது.