ETV Bharat / state

குன்னூர் உபதலைப் பகுதியில் சுற்றித்திரியும் கரடி!

author img

By

Published : May 26, 2020, 5:47 PM IST

நீலகிரி: குன்னூர் உபதலை குடியிருப்பு பகுதிகளுக்குகள் கரடி ஒன்று சுற்றிவருவதால் அப்பகுதி மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வர அச்சமடைந்துள்ளனர்.

குன்னூர் கரடி  குன்னூர் உபதலை கரடி  குன்னூர் செய்திகள்  நீலகிரி செய்திகள்  Coonoor news  Coonoor bear  Coonoor upathali bear  குன்னூர்  கரடி  bear surrounding Coonoor
குன்னூர் உபதலைப் பகுதியில் சுற்றித்திரியும் கரடி

நீலகரி மாவட்டம் குன்னூர் வனப்பகுதியிலிருந்து குடியிருப்பு பகுதிக்குள் வன விலங்குகள் அவ்வப்போது வருவது வழக்கம். தற்போது ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், சமீபகாலமாக கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிக்குள் ஹாயாக உலாவருகின்றன.

கடந்த சில நாள்களாக குன்னூர் உபதலைப் பகுதியில் கரடி ஒன்று சுற்றிவருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர், கரடியை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

மீண்டும் கரடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது. இரண்டாவது முறையாக கரடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது குறித்து வனத்துறையினருக்கு தகவலளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், அப்பகுதி மக்கள் தனியாக வெளியேவர அச்சமடைந்துள்ளனர். மேலும், கரடியைக் கூண்டு வைத்துப் பிடிக்கவேண்டும் எனவும் வனத்துறையினரை வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: ஏடிஎம் மையத்துக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.