நீலகிரி: குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் சாலைகள், குடியிருப்பு, தேயிலைத்தோட்டங்கள் ஆகியப்பகுதிகளில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள அரவங்காடு வெடி மருந்து தொழிற்சாலைக்குச்சொந்தமான மைதானத்தில் புகுந்த கரடி சிறிது நேரம் அங்கேயே சுற்றித்திரிந்தது. இதனைக்கண்ட காவலர் கூச்சலிட்டதால் கரடி மைதானத்தில் இருந்து ஓடி, அருகில் இருந்த புதருக்குள் சென்று மறைந்தது.
நல்வாய்ப்பாக பள்ளி மாணவ மாணவியர் மைதானத்தில் விளையாடாமல் வகுப்பறைக்குள் இருந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நீலகிரி மலை ரயிலுக்கு புதிய என்ஜின் - பொன்மலை ரயில் பணிமனை சாதனை