நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழைப் பொழிவு காரணமாக அங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. தற்போது மழையின் அளவு குறைந்தபோதும் மண்ணில் ஈரப்பதம் அதிகமாகவே உள்ளது.
எனவே செங்குத்தான மலைப் பகுதிகளில் பாறைகள் உருண்டு வருகின்றன. இந்நிலையில் கோத்தகிரி கடைகம்பட்டி கிராமம் அருகேயுள்ள தேயிலை தோட்டத்தில் ஐந்து வயதுடைய பெண் கரடியின் மீது பாறை விழுந்தது.
இந்நிலையில், கரடியின் அலறல் சப்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் கரடியை மீட்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.
ஆனால் கரடி அதே இடத்தில் துடிதுடித்து இறந்தது. பின்னர் வனத்துறையினர், மருத்துவர்கள் உதவியுடன் இறந்த கரடியை உடற்கூறாய்வு செய்து, அப்பகுதியிலேயே புதைத்தனர்.
இதையும் படிங்க: கடையம் வனப்பகுதியில் கூண்டில் சிக்கிய கரடி