பரத நாட்டியம் மிகத் தொன்மைவாய்ந்த நமது நாட்டின் பாரம்பரிய நடனமாகும். ஆனால் இதன் மீது இளம்தலைமுறையினருக்கு ஆர்வம் குறைந்துவருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை வந்து கலாஷேத்ராவில் தங்கி ஆஸ்திரேலிய இளைஞர் கிறிஸ்டோபர் குருசாமி பரதநாட்டியம் பயின்றுவருவது அனைவரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் நீலகிரி மாவட்டத்தில் நீலகிரி கேந்திரா பாரதிய வித்யா பவன் சார்பில் நடைபெற்ற 15ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் இவரின் நடனத்தைப் பார்த்து பார்வையாளர்கள் அசந்துபோயினர்.
கலாசார மாற்றத்தால் மேற்கிந்திய நடனத்தின் பக்கம் இந்த சமூகம் ஓடிக்கொண்டிருக்கும்போது, பாரம்பரியத்தின் மீது இவருக்கு உள்ள பற்றுதலுக்காகவும், இவரின் நடனத்திறமையைப் போற்றும் வகையிலும், சென்னை மியூசிக் அகாதெமி இவருக்கு சிறந்த நடன கலைஞருக்கான விருதை 2015ஆம் ஆண்டு வழங்கியது.
இந்நிலையில் நீலகிரி கேந்திரா பாரதிய வித்யா பவன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு கிறிஸ்டோபர் குருசாமி செய்தியாளர்களிடம் பேசினார். "சிறுவயதில் இருந்தே இந்திய கலாசாரம் தனக்கு மிகவும் பிடிக்கும்" என்றார்.