ETV Bharat / state

குன்னூரில் ராணுவ பயிற்சி வீரர் தற்கொலை! - Nilgiris Military Trainer Suicide

நீலகிரி: குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் உள்ள பயிற்சி வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

dsd
sds
author img

By

Published : Apr 21, 2020, 10:08 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் 46ஆவது வாரம் ராணுவ வீரர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. இங்குப் பயிற்சி பெறுபவர்கள் பல்வேறு இடங்களுக்கும் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பப்படுகின்றனர். ஆனால், தற்போது கரோனா பாதிப்பு காரணமாக ராணுவ பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராணுவ மையத்தில் பயிற்சி பெற்றுவந்த மதுரையைச் சேர்ந்த சம்பத்குமார், திடீரென காணாமல் போகியுள்ளார். அவரை மற்ற வீரர்கள் தேடிவந்த நிலையில், பிளாக் பிரிட்ஜ் பகுதியில் சம்பத்குமார் தூக்கு போட்ட தற்கொலைசெய்திருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வெலிங்டன் காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு குன்னூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ஊரடங்கால் தப்பிக்க வழியில்லை: சரணடைந்த குற்றவாளிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.