ETV Bharat / state

”நீலகிரி குடியிருப்பு பகுதியில் சுற்றலாப் பயணிகளுக்கு அனுமதி கிடையாது” - Apartments shouldn’t use commercial purposes

நீலகிரியில் குடியிருப்பு கட்டிடங்களில் சுற்றுலாப் பயணிகள் தங்க அனுமதி வழங்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
author img

By

Published : Sep 15, 2021, 9:35 PM IST

நீலகிரி :110 சட்டவிரோத கட்டுமானங்கள் வரன்முறைப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கோரிக்கை மனு மீது பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்

நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் தான் சுற்றுசூழல் மாசு ஏற்படுத்துவதாக தெரிவித்த நீதிபதிகள், சட்டவிரோத ரிசார்ட்கள் நீலகிரியில் அதிக அளவில் உள்ளதாகவும், சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் நச்சு புகை பரவுவதாகவும், இயற்கையின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தனர்.

நீலகிரியில் குடியிருப்பு கட்டிடங்களில் சுற்றுலாப் பயணிகள் தங்க அனுமதி வழங்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், குடியிருப்பு பகுதிகளில் சுற்றுலாபயணிகள் தங்கியிருக்கிறார்களா என்பது குறித்து மாவட்ட அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

குடியிருப்புகள் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது சட்டவிரோதம்

மேலும், குடியிருப்புகள் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது சட்டவிரோதம் என தெரிவித்த நீதிபதிகள், விடுமுறை காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாகும் என்பதால் போதுமான கட்டுப்பாடுகள் அமல்படுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். இது குறித்து தமிழ்நாடு அரசு ஆறு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க : 10.5% வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.