நீலகிரி அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் கெமிக்கல் டிபார்ட்மெண்டில் இன்று(நவ-19) காலை வெடி விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதுமில்லை. இருப்பினும் வெடிப்பின் சத்தத்தால் தொழிலாளர்களில் சிலருக்கு காதுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெடி மருந்து வெடித்ததில் மேற்கூரையில் இருந்த ஓடுகள் மேலே விழுந்ததில் தொழிலாளர்கள் 7 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:பிரியா மரணம்: மாணவிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் மறுப்பு