நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை பர்லியார் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீதரன், சங்கீதா தம்பதி. இவர்களது இரு மகன்கள் அகில், நிகில். இவர்கள் இருவரும் நேற்று தனது அத்தை, வீட்டின் அருகில் உள்ள இரு பெண்களுடன் மரப்பாலம் அருவி பகுதிக்குச் சென்றுள்ளனர்.
அப்போது நிகில் ஆற்றிற்குள் சென்று செல்ஃபி எடுக்க முயற்சித்தபோது, தவறி விழுந்து சுழலில் சிக்கினார்.
இதையடுத்து, குன்னூர் தீயணைப்புத் துறையினருக்கு கிடைத்த தகவலின்பேரில் நிகிலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இருள் சூழ்ந்ததாலும், யானைகளின் நடமாட்டம் காணப்பட்டதாலும் தேடும் பணியை நிறுத்தினர்.
பின்னர் இன்று மீண்டும் நிகிலைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபடுகின்றனர்.
இதையும் பார்க்க:செல்பியுடன் தங்களது வாழ்கையை முடித்து கொண்ட காதல் ஜோடி!