ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமணன், சுமன் குமாரி தம்பதியினர் நீலகிரி மாவட்டம் தூதூர்மட்டம் அருகே உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ப்ரீத்தம் என்ற மகனும், ப்ரீத்தி குமாரி என்ற மகளும் உள்ளனர். ப்ரீதம் வடமாநிலத்திலுள்ள அவர்களது உறவினர் வீட்டிலும், ப்ரீத்தி குமாரி(8) பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (டிசம்பர் 21) வீட்டின்முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிறுமி பிரீத்தி குமாரி காணாமல் போயுள்ளார். இதைத்தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள குடியிருப்புகளில் அவரது பெற்றோர் தேடியும் சிறுமியை கண்டுபிடிக்கமுடியவில்லை. இதனால், சிறுமியின் பெற்றோர் கொலக்கம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில், குன்னூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் குற்றப்பிரிவு காவலர்கள், வனத்துறையினர் அடங்கிய தனிப்படையினர் சிறுமியை தேடிவருவதோடு, அங்குள்ள தொழிலாளர்களிடமும் விசாரணை நடத்திவருகிறார்கள். இதில், சந்தேகத்திற்கிடமான 15 வயதுடைய சிறுவனைப் பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இன்று (டிசம்பர் 23) மூன்றாவது நாளாக தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: எண்ணெய் ஆலையில் தீ: ரூ.25 லட்சம் பொருள்கள் சேதம்!