ETV Bharat / state

மலை ரயிலுக்கு 4 புதிய பெட்டிகள்! - சோதனை ஓட்டம் நிறைவு! - ஐசிஎஃப்

நீலகிரி: சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மலை ரயிலில் புதிதாக 4 பெட்டிகளின் சோதனை ஓட்டம் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இன்று இயக்கப்பட்டது.

train
train
author img

By

Published : Mar 11, 2021, 6:02 PM IST

ஊட்டி - குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயில், நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இதில் பயணிக்க உள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் மலை ரயிலுக்காக சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரான 4 புதிய பெட்டிகள், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை சோதனை ஓட்டத்திற்காக கொண்டுவரப்பட்டது.

இதில் அருவி, இயற்கை காட்சிகளை எளிதாக கண்டு ரசிக்கும் வகையில், 4 பெட்டிகளின் இரு பக்கவாட்டிலும் அதிகளவு கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. பழைய இன்ஜின் மூலம் இழுத்து வரப்பட்ட இந்தப் பெட்டிகளின் சோதனை ஓட்டம், இன்று நடைபெற்றது. விரைவில் இப்பெட்டிகள் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலை ரயிலில் புதிதாக 4 பெட்டிகள்! - சோதனை ஓட்டம் நிறைவு!

இதையும் படிங்க: ஆனை கட்டிப் போரடிக்கும் சங்க காலக் காட்சியை மீண்டும் உயிர்ப்பித்த மதுரை மைந்தர்: வைரல் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.