நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள தங்காடு மற்றும் ஓரநள்ளி ஆகிய பகுதிகளிலிருந்து 21 பேர் மார்ச் மாதம் ஆந்திரா மாநிலத்தில் உள்ள புட்டப்பர்த்தி சென்றனர்.
இதற்கிடையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், இவர்கள் அங்கிருந்து திரும்ப முடியாமல் தவித்தனர்.
அதனைத்தொடர்ந்து அங்குள்ள மாநில அரசுகளின் உதவியுடன் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என்று மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வந்தது.
அதனால் அவர்கள் அனைவரும் சிறப்பு பேருந்து மூலம் தமிழ்நாட்டிற்கு அனுப்பட்டனர். இதையடுத்து அவர்கள் குன்னூர் பகுதியில் தற்காலிகமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மீண்டும் அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு, அனைவரும் கிராம பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு