நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குள்பட்ட மண் வயல் பகுதியில் வசிப்பவர் மணி நேற்று முன்தினம் (டிச. 08) அவரது வீட்டின் அருகில் விரகு சேகரிப்பதற்காகச் செல்லும்போது அங்கு இருந்த ஒற்றை யானை மணியைத் துரத்தி மிதித்துக் கொன்றது.
இந்நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் கிராமங்களுக்குள் நடமாடும் ஒற்றை யானை 20-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்த நிலையில் 4 பேருக்கும் மேற்பட்டோரை கொன்றுள்ளது.
இதனிடையே பலமுறை கோரிக்கைவைத்தும் வனத் துறையினர் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து உடற்கூராய்வு செய்யப்பட்ட மணியின் உடலை மருத்துவமனையிலிருந்து வாங்க மறுத்து மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். இதனையடுத்து வனத் துறையினர் இரண்டு நாள் பேச்சுவார்த்தைக்குப் பின் நேற்று (டிச. 09) மதியம் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன்பின்பு வனத் துறையினர் நேற்று முதுமலையிலிருந்து சிறப்புப் பயிற்சி பெற்ற இரண்டு கும்கி யானைகள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட வன ஊழியர்களை வரவழைத்தனர். அவர்கள் அந்த யானையை விரட்டும் பணியை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: 14 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை: லாரி ஓட்டுநர் கைது!