நீலகிரி: குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில், நூற்றாண்டை கடந்து 2005ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி உலகின் மிகவும் பழமையான மலை ரயில் என்று அனுசரிக்கப்பட்டு, யுனெஸ்கோவினால் உலக ஹெரிடேஜ் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 17 ஆண்டுகள் முடிவடைந்து பதினெட்டாம் ஆண்டில் கால் வைக்கும் உலக ஹெரிடேஜ் தினமான இன்று (ஜூலை 15), அதனை நினைவூட்டும் வகையில் குன்னூர் ரயில் நிலையத்தில் நீலகிரி மலை இரயில் குழுவினர் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வந்த மலை ரயில் இன்ஜின் பைலட் மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.
இந்த உலக ஹெரிடேஜ் தினமான இன்று மலை ரயிலைப் பற்றி சுற்றுலாப் பயணிகளுக்கு விரிவாக எடுத்துச் கூறினர்.
இதையும் படிங்க: நீலகிரியில் மின்கம்பியில் சிக்கி யானை, கரடி மற்றும் காட்டுப்பன்றி அடுத்தடுத்து உயிரிழப்பு!