நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுகலை மாவநல்லா பகுதியில் தனியார் சொகுசு விடுதி நடத்திவந்தவர்கள், தீ வைத்து யானையை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டதோடு, மசினகுடி பகுதியல் சில காட்டேஜ்களுக்கு சீல் வைக்கப்பட்டன.
இந்நிலையில், குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில், யானைகள் நடமாட்டம் உள்ள குரும்பாடி ஆதிவாசி கிராமம் அருகேயுள்ள வனப்பகுதிக்குள் அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்த தனியார் சொகுசு விடுதிகளுக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனடிப்படையில், பர்லியார் ஊராட்சி, வருவாய்த் துறையினர் இன்று (பிப். 8) 15 விடுதிகளுக்கு அதிரடியாக சீல் வைத்தனர்.
இதையும் படிங்க: வன பாதுகாவலனின் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்?