நீலகிரி: கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக கோடை விழா நடத்தப்படவில்லை. இந்த நிலையில், நடப்பாண்டு மலர் கண்காட்சி உள்ளிட்ட அனைத்து கண்காட்சிகளும் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது.
அதன்படி நேற்று (சனிக்கிழமை) கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் 11ஆவது காய்கறி கண்காட்சி தொடங்கி நாளை (திங்கள்கிழமை) வரை 2 நாள்கள் நடைபெற்ற உள்ளது.
இந்தக் கண்காட்சியை தமிழ்நாடு சுற்றுலா இயக்குநர் சந்தீப் நந்தூரி ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தார். இதில் கோவை, திருவண்ணாமலை, தேனி, காஞ்சிபுரம், கள்ளகுறிச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறையினர் பல்வேறு வகையான காய்கறிகளை கொண்டு கைகளால் வடிவமைக்கப்பட்ட ஒட்டங்கசிவிங்கி, சிங்கம், மீன், கரடி, வாத்து, வரிக்குதிரை போன்றவற்றை காட்சிப்படுத்தினர்.
கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த காய்கறி கண்காட்சி இந்தாண்டு நடைபெறுவதால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க : வீடுகளை அகற்றும் பணிகளை நிறுத்துக..! முதலமைச்சருக்கு மூத்தத் தலைவர் நல்லகண்ணு கோரிக்கை!