ETV Bharat / state

ஒரு வாரம் முன்பு இறந்த சிறுத்தை உடற்கூராய்வு செய்யப்பட்டு எரிப்பு! - Nilgiri Forest officer

நீலகிரி: கோத்தகிரி அருகே புடியங்கி கிராமத்தில் ஒரு வாரம் முன்பு இறந்த 10 வயது சிறுத்தையை வனத் துறையினர் உடற்கூராய்வு செய்து, அதே இடத்தில் தீ மூட்டி எரித்தனர்.

இறந்த 10 வயது சிறுத்தை
இறந்த 10 வயது சிறுத்தை
author img

By

Published : Mar 5, 2021, 4:33 PM IST

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே புடியங்கி கிராமத்தில் தேயிலை பறிக்க தொழிலாளர்கள் சென்றுள்ளனர். அப்போது, அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது துர்நாற்றம் வீசியதால், வேலைக்குச்சென்ற தொழிலாளர்கள் அருகில் சென்று பார்த்தனர்.

அப்போது, அங்கு சிறுத்தை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதையடுத்து, வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வனத் துறையினர் வந்து பார்த்தபோது, 10 வயது சிறுத்தை ஒரு வாரம் முன்பு மரணமடைந்ததாக முதல்கட்ட தகவலில் தெரியவந்தது.

நீலகிரியில் 10 வயது சிறுத்தை உயிரிழப்பு

பின்பு உடற்கூராய்வு செய்யப்பட்டு சிறுத்தையை தீ மூட்டி எரித்தனர். மருத்துவ அறிக்கை வந்தபின்பு சிறுத்தை இறந்தற்கான காரணம் என்ன என்று தெரியவரும் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.