நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் மழை காரணமாக மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு அதிக பாதிப்புக்குள்ளாகிவருகிறது. இதை தடுக்கும் நோக்கில் குன்னூர் பகுதியில் ஜெயின் சமுதாயம் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடமுடிவு செய்யப்பட்டது.
அதன்படி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுமார் 10 ஆயிரம் மரக்கன்றுகள் இன்று நடப்பட்டன. இதில் ஏராளமான ஜெயின் சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:குன்னூர் சாலையில் வாக்கிங் போன யானைக்கூட்டம்!