நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 25 ஆண்டுகளாக திரையரங்குகள் வெற்றிகரமாக இயங்கிவந்தன. அதில் 800க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வந்துள்ளனர்.
எம்.ஜி.ஆர்-சிவாஜி படம் தொடங்கி விஜய்-அஜித் காலம்வரை படங்களை காண மக்கள் கூட்ட கூட்டமாக இந்த திரையரங்குகளுக்கு வந்து செல்வார்கள். ஆனால் தற்போதைய காலத்தில் தொலைக்காட்சி, குறிப்பாக ஸ்மார்ட் போனிலேயே மக்கள் புதிய படத்தை பார்த்துவிடுகிறார்கள், மேலும் மல்டி ஃபிளக்ஸ் திரையரங்குகளின் வருகையாலும் மக்கள் பழைய திரையரங்குகளை ஓரம் கட்டியுள்ளனர்.
இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் மல்டி ஃபிளக்ஸ் அல்லாத திரையரங்கில் மக்கள் செல்லாததால், வசூலும் கிடைக்காததால், திரையரங்குகள் ஒன்றன் பின் ஒன்றாக என தற்போது பத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டதுள்ளது.
இதனால் அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த ஊழியர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. மேலும் சில திரையரங்குகள் இடிக்கப்பட்டு வணிகரீதியான கட்டடங்களாகவும் மாற்றப்பட்டுள்ளது.