தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் உள்ள குடியானத் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர்(42). இவர் தனது தாய் மற்றும் தன் தம்பி ஆகியோருடன் வசித்துவருகிறார். இளம் வயது முதலே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிய அவர் தினந்தோறும் குடித்து விட்டு வந்து தனது தம்பி மற்றும் தாயை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இதேபோல நேற்றும் குடித்துவிட்டு வந்து தனது தாய் மற்றும் தனது தம்பியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது, அவர் தனது தம்பி அசோக்கை மூங்கில் கட்டையால் தாக்கியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அவரது தம்பி வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து நாற்காலியில் அமர்ந்திருந்த தனது அண்ணனின் தலையில் தாக்கியுள்ளார்.
இதில் அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டு பாஸ்கர் சம்பவ இடத்திலே பலியானார். அக்கம் பக்கத்தினர் இச்சம்பவம் குறித்து அளித்த தகவலையடுத்து வந்த காவல்துறையினர்,பாஸ்கரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
காவல்துறையைக் கண்டதும் ஓடமுயற்சித்த தம்பி அசோக்கை விரட்டிச் சென்று பிடித்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முதியவரைக் கடுமையாகத் தாக்கி வழிப்பறி செய்த மூன்று நபர்கள் - பதற வைக்கும் சிசிடிவி பதிவு