தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிறந்து நான்கு நாள்களே ஆன பெண் குழந்தையை கட்டைப்பையில் வைத்து கடத்திச் சென்ற பெண்ணை காவல் துறையினர் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், இன்று (அக்.09) கடத்தப்பட்ட குழந்தை பட்டுக்கோட்டை அண்ணாநகரைச் சேர்ந்த விஜி என்ற பெண்ணிடமிருந்து மீட்கப்பட்டது. இதையடுத்து அந்த குழந்தைக்கு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
குழந்தையை கடத்திய பெண் கைது
பின்னர், அந்த குழந்தையை பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் தலைமையிலான காவல் துறையினர், அவசர ஊரதி மூலம் தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, பச்சிளம் குழந்தையை கட்டைப்பையில் வைத்து கடத்திய விஜி, அவரது கணவர் பால முருகன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கட்டைப்பையில் வைத்து பெண் குழந்தை கடத்தல் - சிசிடிவியை வைத்து விசாரணை