ETV Bharat / state

கணவர் படுகொலை - மன உளைச்சலில் மனைவி தற்கொலை

கும்பகோணம் அருகே கணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் கடும் மன உளைச்சலில் இருந்த மனைவி நேற்று (ஜூன் 04) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல
தற்கொலை எதற்கும் தீர்வல்ல
author img

By

Published : Jun 5, 2022, 8:27 AM IST

தஞ்சாவூர்: கும்பகோணம் ஆழ்வான் கோவில் தெருவில் வசித்து வந்தவர் கார் ஓட்டுநர் தினேஷ். இவர் கடந்த 31ஆம் தேதி மாலை அடையாளம் தெரியாத நபர்களால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கண்டுபிடிக்க வேண்டுமென கோரி தினேஷின் உறவினர்கள் கடந்த 1ஆம் தேதி கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விரைவில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் எனக் காவல் துறையினர் தெரிவித்திருந்த நிலையில், கார்த்திக், மணிகண்டன், விஜயகுமார், சிபிராஜ், சந்தோஷ்குமார், தருண் பாலாஜி ஆகிய ஆறு பேரை இதுவரை காவலர்கள் கைது செய்துள்ளனர், மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல
தற்கொலை எதற்கும் தீர்வல்ல

இந்நிலையில் இன்று (ஜூன் 04) காலை கொலை செய்யப்பட்ட தினேஷின் மனைவி செல்வகுமாரி (26) திருமணமாகி ஓர் ஆண்டே ஆகும் நிலையில், கணவர் திடீரென யாரும் எதிர்பாரா வேளையில் படுகொலை செய்யப்பட்டதால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், செல்வகுமாரியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பிறந்து 45 நாள்களே ஆன குழந்தையை கொன்ற கொடூர தந்தை கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.